Thursday, August 14, 2014

introduction to Moodle in tamil ( moodle தமிழில்)

   No comments     
categories: 


Moodle
Moodle ஆனது ஒரு மெய்நிகர் கல்வி சூழலின் (Virtual learning environment) கற்றல் தளம் ஆகும். அத்துடன் கணிணி வலைதளத்துடன் தொடர்புடைய இலவச மென்பொருளான(open-source) ஒரு மின்கற்றல் (e-learning) முறைமை ஆகும்.
Modular Object-Oriented Dynamic Learning Environment என்பதன் சுருக்கமே Moodle ஆகும்.
Moodle மார்டின் டௌகியமஸ் (Martin Dougiamas) அவர்களால் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு அபிவிருத்தி செய்யப்பட்ட கணிணி வலைத்தள தொடர்புடைய கூட்டு கட்டுமானமாகும். அத்தோடு தொடர்ந்து  வளர்ச்சியடைந்து வரும் மென்பொருளாகும். Cross-Platform இயங்கு தளமான Moodle, PHP படிவ நிரலாக்க மொழி மூலம் உருவாக்கப்பட்டது. இதன் முதற்பதிப்பானது 20 ஆகஸ்ட் 2002 இல் வெளியிடப்பட்டது. இக்கற்றல் தளம் கற்போர், கற்பிப்போர் மற்றும் நிர்வாகிகளுக்கு பாதுகாப்புடன் கூடிய, ஒருங்கிணைந்த அமைப்பாக உருவாக்க்கப்பட்டுள்ளது. அத்தோடு 65 மில்லியன் கல்விசார், நிறுவன பாவனையாளர்களை கொண்டுள்ளது. moodle உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் இலவச கற்றல் தளமாகும். GNU GENERAL PUBLIC LICENSE மூலம் இலவசமான open-source ஆக வழங்கப்படுகிறது.

Moodle கொண்டுள்ள சிறப்பம்சங்கள்.
moodle ஆனது மேலாண்மை கற்றல் அமைப்பு (learning management systems) ஆகும். மின்கற்றல் தளத்துக்கான, பல குறிப்பிடத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது.
  • ·         ஒப்படை சமர்பித்தல்
  • ·         கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை மன்றம்
  • ·         கோப்புக்கள் தரவிறக்கம்
  • ·         தரம் பிரிப்பு
  • ·         உடனடி தகவல்கள்
  • ·         இணைய இணைப்பு நாட்காட்டி
  • ·         இணைய இணைப்பு செய்தி மற்றும் அறிவிப்புக்கள்
  • ·         இணைய இணைப்பு வினாவிடை
  • ·         Wiki தகவல் களஞ்சியம்
                     ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
moodle அபிவிருத்தி செய்பவர்கள் குறிப்பிட்ட புதிய plug-ins களை கட்டுமானங்களாக உருவாக்க முடியும். moodle உள்கட்டமைப்பு பலவிதமான plug-ins களை உள்ளடக்ககூடியது.
  •   சொல் மற்றும் கணித செயற்பாடுகள்
  •   வினாவிடை வகைகள் (பல தேர்வு வினா, இடைவெளி நிரப்பல்)
  •   தகவல் செயற்பாடுகள்
  •   வரைகலை கருப்பொருள்
  •   உறுதிப்பாட்டு முறைகள்
  •   சேர்க்கை முறைகள்
                     அவற்றுள் சிலவாகும்.
moodle பாவனையாளர்கள் PHP படிவ நிரலாக்க மொழி பயன்படுத்தி புதிய தொகுதிகளை உருவாக்குவதன் மூலம் moodle இற்கு பங்களிக்க முடியும். moodle இன் அபிவிருத்தி செயற்பாடுகள் open-sources நிரலர்கள் துணையோடு செய்யப்படும்.
இலகுவான drag and drop அம்சங்கள், நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வளங்கள் அத்தோடு மேம்படுத்தப்பட்ட பயன்பாடு ஆகியன moodle ஐ இலகுவாககற்கவும் பயன்படுத்தையும் ஏதுவாக உள்ளன. அத்தோடு 95 இற்கும் மேற்பட்ட மொழிகளிலும் வளங்கபடுகின்றது.
moodle வெளியிடுகள்
வெளியிடப்பட்ட நாள்
பதிப்பு
நிலை
20-ஆகஸ்ட்-2002
1.0.9
முடிவு
29-ஆகஸ்ட்-2003
1.1.1
முடிவு
20-மார்ச்-2004
1.2.1
முடிவு
25-மே-2004
1.3.5
முடிவு
31-ஆகஸ்ட்-2004
1.4.5
முடிவு
05-ஜூன்-2005
1.5.4
முடிவு
20-மே-2006
1.6.9
முடிவு
07-நவம்பர்-2006
1.7.7
முடிவு
30-மார்ச்-2007
1.8.14
முடிவு
03-மார்ச்-2008
1.9.19
முடிவு
24-நவம்பர்-2010
2.0.10
முடிவு
01-ஜூன்-2011
2.1.10
முடிவு
05-டிசம்பர்-2011
2.2.11
முடிவு
25-ஜூன்-2012
2.3.10
முடிவு
03-டிசம்பர்-2012
2.4.7
முடிவு
14-மே-2013
2.5.3
செயல்
18-நவம்பர்-2013
2.6.1
செயல்
12-மே-2014
2.7.1
செயல்



0 comments:

Post a Comment